ஜனாதிபதியின் ஆட்சிக்காலம் குறித்து திருப்தி! வாசுதேவ நாணயக்கார

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கடந்த நான்கு ஆண்டு ஆட்சிக்காலம் குறித்து திருப்தியடைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தனது ஜனாதிபதி பதவியை ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் தன்னிச்சையாக பயன்பாட்டுக்கு எதிராக செயற்படுத்தியதன் மூலம் மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி பதவியின் பெறுமதியை காட்டியுள்ளார்.

அத்துடன் நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த தேவையான வாய்ப்பை உருவாக்க ஜனாதிபதி தலையிட்டமை முக்கியமானது.

இதற்கு அமைய தற்போதைய ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்தை ஒரு விதத்தில் சிறந்த முறையில் பயன்படுத்தியுள்ளதை காணமுடிகிறது எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.