பதவி ஆசை எனக்கில்லை! ஒரே வார்த்தையில் முடித்தார் சம்பந்தன்

Report Print Rakesh in அரசியல்

நான் ஒருபோதும் பதவிக்கு ஆசைப்பட்டவன் அல்லன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்சவே செயற்படுவார் எனப் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி நேற்று சபையில் அறிவித்தார்.

சபாநாயகர் அறிவிப்பு வேளையிலேயே சபாநாயகரின் இந்தத் தீர்மானத்தை பிரதி சபாநாயகர் அவைக்கு அறிவித்திருந்தார் . இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனா அல்லது மஹிந்த ராஜபக்சவா என்று நிலவிய சர்ச்சை முடிவுக்கு வந்தது.

இது தொடர்பில் தங்கள் கருத்து என்னவென்று இரா.சம்பந்தனிடம் வினவியபோதே ஒரே வார்த்தையில் அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.