முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே கூறிய கறிவேப்பிலை கதை!

Report Print Steephen Steephen in அரசியல்

மாகாண ஆளுநர்களை நீக்கி விட்டு, புதிய ஆளுநர்களை நியமிக்கும் தீர்மானம் அவசரமாக எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல என வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

ஆளுநர்களை நீக்க வேண்டிய அவசியம் இருப்பதாக கடந்த வருடம் ஜனாதிபதி கூறினார். சில மாகாணங்களின் ஆளுநர் பதவிகளில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டது.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர்கள் உட்பட சிலர் அமைக்கப்பட உள்ள கூட்டணியில் இணைவது தொடர்பில் இரு மனப் போக்கில் இருந்து வருகின்றனர்.

கறிக்கு போடும் கறிவேப்பிலை, ரம்பை போன்று ஆகி விடலாம் என்பதே அவர்களின் இந்த மனப் போக்கிற்கு காரணம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட கட்சியினர் எடுக்கும் தீர்மானத்திற்கு அமைய தமது எதிர்கால அரசியல் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் பதவியை நேர்மையாகவும் அர்ப்பணிப்புடன் மேற்கொண்டதாகவும் ரெஜினோல்ட் குரே குறிப்பிட்டுள்ளார்.