போர்க்குற்ற சர்ச்சையில் சிக்கியவருக்கு இராணுவ உயர் பதவி!

Report Print Steephen Steephen in அரசியல்

இராணுவ தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை இராணுவத்தின் 53ஆவது படைப் பிரிவின் பொறுப்பதிகாரியான சவேந்திர சில்வா இறுதிக்கட்டப் போரில் அதிகளவில் பேசப்பட்ட இராணுவ அதிகாரியாவார்.

58ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதியாக கடமையாற்றிய சவேந்திர சில்வா, வீரவிக்ரம விபூஷண, ரண விக்ரம, ரணசூர, உத்தம சேவா ஆகிய பதக்கங்களை பெற்றுள்ளார். எது எப்படி இருந்த போதிலும் இறுதிக்கட்டப் போரில் நடந்த மனித உரிமை மீறல்களுடன் சவேந்திர சில்வாவுக்கு தொடர்புள்ளதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சுமத்தி வருகின்றன.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் அவர் ஐக்கிய நாடுகளுக்கான பிரதி வதிவிடப்பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

மேலும், இறுதிப்போரின்போது வெள்ளைக்கொடி சம்பவத்துடன் சவேந்திர சில்வா பேசப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.