ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் அவசரம் ஜனாதிபதிக்கு இல்லை: மகிந்த சமரசிங்க

Report Print Steephen Steephen in அரசியல்

அவசரமாக ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் தேவை ஜனாதிபதிக்கு இல்லை என முன்னாள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த யாரும் கூறுவதை நான் காணவில்லை.

நாடாளுமன்றத்தில் நேற்று மதியம் உணவின் போது அங்கு வந்த அமைச்சர் மனோ கணேசன், ஜனாதிபதியை பார்த்து, ஜனாதிபதித் தேர்தலை நடத்த ஆளுநர்களை புதிதாக நியமித்துள்ளதாக கூறுகின்றனர் என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, ஜனாதிபதித் தேர்தல் எப்போது நடைபெறும் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும் அதற்கு அமைய தான் செயற்படுவதாக கூறினார்.

ஜனாதிபதிக்கு ஜனவரி 8 ஆம் திகதிக்கு பின்னர் அவசரமாக ஜனாதிபதித் தேர்தலை நடத்த ஜனாதிபதிக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. ஆனால், ஜனாதிபதிக்கு ஜனாதிபதித் தேர்தலை நடத்த எந்த அவசரமும் இல்லை. இன்னும் தனக்கு செய்ய வேண்டிய பல பணிகள் இருப்பதாக ஜனாதிபதி கூறினார். அவற்றை செய்த பின்னர், இந்த வருடம் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்க வேண்டும்.

அதற்கு அமைய ஜனாதிபதி நடவடிக்கைகளை எடுப்பார். அதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்க மாட்டார். யார் என்ன கூறினாலும் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது குறித்து தீர்மானிக்கக் கூடிய ஒரே நபர் ஜனாதிபதி.

ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் காலத்தை நாடாளுமன்றம் கூற முடியாது. அரசியலமைப்புச்சட்டத்தில் அந்த அதிகாரம் ஜனாதிபதிக்கே வழங்கப்பட்டுள்ளது எனவும் மகிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.