கடமைகளை பொறுப்பேற்ற மேல் மாகாண ஆளுநர்

Report Print Gokulan Gokulan in அரசியல்

மேல் மாகாண ஆளுநராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் நியமிக்கப்பட்ட அசாத் சாலி இன்று ராஜகிரியவில் உள்ள மேல் மாகாண ஆளுநர் அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதியுடன் கடந்த 2015ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தோ்தலில் இருந்து அவருடன் நெருக்கமாக எனது அரசியல் பணியைத் தொடா்ந்தேன் என மேல் மாகாண புதிய ஆளுநர் தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் உரையாற்றிய மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

நான் ஒரு வங்கி ஊழியராகப் பணியாற்றி கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பிரதி மேயர் மத்திய மாகாண உறுப்பினராகவும் எனது அரசியல் சேவையை செய்து வருகின்றேன்.

மேல் மாகாணத்தில் முன்னாள் ஆளுநர் காலம் சென்ற அலவி மௌலானாவின் காலத்தில் மேல்மாகணத்தின் கல்விப் பிரச்சினைகளுக்கு ஒரு குழு அமைத்து செயலாற்றியுள்ளேன்.

கொழும்பில் கல்வியின் பின் தங்கியுள்ளோம். பாடசாலைகளுக்கு பிள்ளைகளை சேர்ப்பதற்கு பெற்றோர்கள் பாடசாலையில்லாமல் சர்வதேச பாடசாலைகளுக்கு தமது குழந்தைகளை சேர்ப்பதற்காக தமது சொத்துக்களையும், முச்சக்கர வண்டிகளை விற்று சர்வதேச பாடசாலைகளில் சேர்க்கின்றனர்.

பின்னர் அவர்களுக்கு மாதாந்தக் கொடுப்பணவு வழங்க வருமானம் இல்லாது அரசியல் வாதிகளின் படிகளின் ஏறி பாடசாலைகளுக்கு பிள்ளைகளை சோ்பதற்கு பெற்றோர்கள் பெரும் பாடுபடுகின்றனர்.

அதற்காக முதலமைச்சர் மற்றும் மேல் மாகாண அமைச்சரவைகளுடன் இணைந்து ஒரு திட்டம் அமைத்து கல்வி வசதிகள் பாடசாலைகள் குறைபாடுகளை தீர்ப்பதில் முயற்சிகளை மேற்கொள்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இந் நிகழ்வில் மேல் மாகண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய, அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் இராஜாங்க அமைச்சர்களான அமீா் அலி, பைசால் காசீம் மற்றும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் செயலாளா் முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர, முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா உட்பட அரபு நாடுகளின் வெளிநாட்டுத் துாதுவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.