மனோ கணேசனுக்கு 65 கோடிகள் கொடுத்து மகிந்தவுடன் இணைக்க முயற்சி

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் மேல் மாகாண சபை உறுப்பினர் சண்முகநாதன் குகவர்தன், தொடர்புகளை பேணியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்துள்ளார்.

வெள்ளவத்தையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார்,

7 கோடி ரூபாய் காசோலை மோசடி குற்றச்சாட்டின் கீழ் அண்மையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால், கைது செய்யப்பட்ட ஜனநாயக மக்கள் முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் சண்முகநாதன் குகவர்தன், கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமாக, கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி சம்பவத்தின் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் தொடர்புகளை பேணியிருக்கிறார்.

குறிப்பாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கு 65 கோடி ரூபாய் பணத்தை வழங்கி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசியல் கூட்டணியில் இணைப்பதற்கான முயற்சியில் குகவர்தன ஈடுபட்டிருந்தார்.

சில மாதங்களாக குகவர்தன், மகிந்த ராஜபக்ச தரப்புடன் இது சம்பந்தமாக நடத்திய தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய ஒலி தகடுகள் இருக்கின்றன.

இது சம்பந்தமான சட்ட நடவடிக்கை எடுக்க ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் சபை தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.