ஆளுநர் பதவிகளில் அதிரடியாக மாற்றம்!

Report Print Murali Murali in அரசியல்
ஊவா மாகாணத்திற்கு புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தென் மாகாணத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தென் மாகாணத்தின் ஆளுநராக இருந்த மார்ஷல் பெரேரா ஊவா மாகாணத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய அண்மையில் அனைத்து மாகாணங்களின் ஆளுநர்களும் தமது பதவியை இராஜினாமா செய்திருந்தனர்.

இதனையடுத்து புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த திங்கட்கிழமை ஊவா மாகாண ஆளுநராக கீர்த்தி தென்னகோன் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.