கிண்ணியா சூறாசபை கிழக்கு ஆளுனரை சந்தித்து பேச்சுவார்த்தை

Report Print Gokulan Gokulan in அரசியல்

கிண்ணியா சூறா சபையினர் கிழக்கு மாகாண ஆளுனர் கலாநிதி.எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புள்ளாஹ் அவர்களை சந்தித்து தமது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் இன்று தெரிவித்துக் கொண்டனர்.

கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு உட்பட பல விடயங்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை துரித கதியில் இயங்க வேண்டிய அவசியம் பற்றியும் குறித்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

கிண்ணியாவிற்கு வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக்கொண்ட அவர் விரைவில் இதற்கான தினத்தை ஒதுக்கித் தருவதாக உறுதியளித்திருந்தார்.

குறித்த சந்தர்ப்பத்தில் ஆளுனரின் பிரத்தியேக இணைப்புச் செயலாளர் எம்.ஐ.ரைசுடீனும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.