கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் வடமாகாண ஆளுநர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

Report Print Murali Murali in அரசியல்

ஜனநாயகத்திற்கான மூன்று காரணிகளை நடைமுறைப்படுத்த இரண்டு பிரகடனங்களை மேற்கொள்கிறேன் என வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பொது மக்கள் தனக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வட மாகாண ஆளுநராக சுரேன் ராகவன், யாழ். பழைய பூங்கா வளாகத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வைத்து தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார்.

இதனை தொடர்ந்து புதிய ஆளுநரை வரவேற்கும் நிகழ்வு ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சர்வமத தலைவர்கள் அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், கருத்து வெளியிட்டுள்ள வடமாகாண ஆளுநர் ஜனநாயகத்திற்கான மூன்று காரணிகளை நடைமுறைப்படுத்த இரண்டு பிரகடனங்களை மேற்கொள்கிறேன் எனவும், அதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.