மஹிந்தவுக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தியுள்ள மைத்திரி!

Report Print Vethu Vethu in அரசியல்
1060Shares

பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாதென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடந்த மஹிந்த அரசாங்கத்தின் போது மேற்கொள்ளப்பட்ட பாரிய ஊழல் மோசடிகளை கண்டுபிடிக்கும் வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆணைக்குழு அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை ஏற்றுக்கொள்ள மஹிந்த மறுத்துள்ளார்.

நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்று நாடாளுமன்றத்தில் சுயாதீன தொலைகாட்சி சேவை தொடர்பில் வெளியிட்ட கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் மஹிந்த ராஜபக்ச இதனை குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்தவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நிதியமைச்சர், உங்கள் நெருங்கிய தோழனான மைத்திரியிடம் இதனை கூறுங்கள் என மஹிந்தவிடம் தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களை தண்டிக்கப் போவதாக அப்போதைய ஜனாதிபதி பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன சூளுரைத்திருந்தார்.

எனினும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட அரசியல் சதி முயற்சி காரணமாக, மைத்திரி - மஹிந்த இணைந்து ஆட்சியை அமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.