இந்த வருடமும் அரசாங்க ஊழியர்கள் ஏமாற்றப்படுவார்களா?

Report Print Vethu Vethu in அரசியல்

அரசாங்க ஊழியர்களின் சம்பளம் இந்த மாதம் முதல் அதிகரிக்கப்படும் என நிதியமைச்சினை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகி இருந்தன.

எனினும் அவ்வாறு வெளியான செய்திகளில் உண்மையில் இல்லை என தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

நல்லாட்சி அரசாங்கம் 2015ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வரும்போது 1000 ரூபாவினால் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டது. அதனை அடிப்படை சம்பளத்தில் 2500 ரூபா என்ற கணக்கில் 4 பிரிவுகளாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.

அந்த அடிப்படை சம்பளத்தின் இறுதிகட்ட அடிப்படை சம்பள அதிகரிப்பான 2500 ரூபா 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனவரி மாதம் வழங்கப்படும்.

அதற்கமைய சம்பளம் அதிகரிக்கப்படாதெனவும் அதிகரிக்கப்பட்ட 10000 ரூபா ஒவ்வொரு வருடமும் அடிப்படை சம்பளத்துடன் 2500 ரூபா சேர்க்கப்படுகின்றது.

இந்தாண்டுக்கான வரவுத் செலவுத்திட்டத்தில் பாரியதொரு தொகை சம்பள உயர்வாக வழங்கப்படும் என பலரினாலும் எதிர்பார்க்கப்பட்டது. எனினும் சம்பள உயர்வினை வழங்குவதற்கு போதுமான நிதி அரசாங்கத்திடம் இல்லையென உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இரண்டு மாதங்களாக ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலை காரணமாக, பொருளாதார ரீதியாக சமகால அரசாங்கம் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.