உத்தியோகத்தர்கள் இப்படி தான் இருக்க வேண்டும்! சுரேன் ராகவன்

Report Print Suman Suman in அரசியல்
322Shares

உத்தியோகத்தர்கள் றக்பி வீரர்கள் போன்று இருக்க வேண்டும், கோல்ப் வீரர்கள் போன்று அல்ல என வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு இன்று காலை காலை விஜயம் மேற்கொண்டிருந்தார்.

அங்கு வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

கிளிநொச்சியில் இராணுவத்தினர் மற்றும் அதிகாரிகள், பொது மக்கள் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட பணிகள் காரணமாக உரிழப்புக்கள் மற்றும் பாரிய அழிவுகளில் இருந்து மக்களை காப்பாற்ற முடிந்திருக்கிறது. அதற்காக அனைவருக்கும் நன்றி கூறுகின்றேன்.

கிளிநொச்சிக்கான சவால்கள் இன்னும் தீர்ந்துவிடவில்லை. அவற்றை நாம் எதிர்கொள்ள வேண்டும். அத்தோடு எல்லா திணைக்கள அதிகாரிகளுக்குமிடையே ஒத்துழைப்பு இருக்க வேண்டும். ஒருவர் செய்கின்ற பணி இன்னொருவருக்கு தெரியாமலிருக்கிறது கவலைக்குரியது.

தமிழ் மொழி எங்கள் அடையாளம். பத்தாயிரம் வருடங்கள் பழமைவாய்ந்த மொழி உலகில் உள்ள மூத்த பத்து மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. இதனை ஹவார்ட் பல்கலைகழகமும் ஆராச்சி மூலம் உறுதி செய்திருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆளுநர் தலைமையிலான குழுவினர் பன்னங்கண்டி பிரதேசத்திற்கு சென்று அங்கு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலைமைகளையும் ஆராய்ந்துள்ளனர்.