புதிய அரசியலமைப்பு சட்டத்திற்கான குழு அறிக்கைகள் நாளை நாடாளுமன்றத்திற்கு

Report Print Steephen Steephen in அரசியல்

புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்குவது தொடர்பான வழிகாட்டல் குழுவிற்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட சில குழுக்களின் அறிக்கைகள் நாளைய தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான வரைவு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன் புதிய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான வரைவு நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

எனினும் அப்படியான எந்த தயார் நிலைகளும் இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டிருந்தார்.