அமைச்சர் பழனி திகாம்பரத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு விசேட மத வழிபாடுகள்

Report Print Gokulan Gokulan in அரசியல்

மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமாகிய பழனி திகாம்பரத்தின் 52ஆவது பிறந்த தினம் இன்றாகும்.

இதனை முன்னிட்டு மலையகத்தின் பல பகுதிகளில் உள்ள மத ஸ்தலங்களில் விசேட மத வழிபாடுகளும் நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.

ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம், ஹட்டன் நீக்கோரதாம விகாரை, ஹட்டன் திருச்சிலுவை கிறிஸ்தவ ஆலயம் மற்றும் ஹட்டன் ஜூம்மா பள்ளிவாசலிலும் விசேட வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த விசேட வழிபாடுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், தொழிலாளர் தேசிய சங்க பிரதி தலைவர் உதயகுமார், முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் நகரசபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.