மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் மைத்திரி!

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தெரிவு செய்யப்படுவார் என அந்த கட்சியின் ஊடகப் பேச்சாளரான மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிறுத்த, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் கிடைக்கும்.

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுக்கு கிடைத்த மொத்த வாக்குகளை கூட்டினால், 57 வீதம். இந்த முடிவுகளுக்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலகுவாக வெற்றி பெற முடியும்.

இந்த ஆண்டு நவம்பர் மாதமளவில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டு புதிய ஜனாதிபதி அடுத்த ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி தனது பதவிக்காலத்தை ஆரம்பிப்பார் என குறிப்பிட்டுள்ளார்.