சர்வதேச அழுத்தத்தின் ஊடாகவே தமிழர்கள் அரசியல் தீர்வை பெற முடியும் - எம்.கே.சிவாஜிலிங்கம்

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்

சர்வதேச அழுத்தத்தின் ஊடாகவே தமிழர்கள் அரசியல் தீர்வை பெற வேண்டிய நிலை ஏற்படும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 45 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தின் முன்பாக அமைக்கப்பட்டு உள்ள நினைவு தூபியில் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இந்த படுகொலைக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. அதேபோல இலங்கை அரசாங்கம் செய்த இனப்படுகொலைகளுக்கும் நீதி கிடைக்க வில்லை சர்வதே விசாரணைகள் ஊடாகவே நீதி கிடைக்கும்.

இந்நிலையில் இன்று அரசியல் தீர்வும் கேள்விக்குறியாக உள்ள நிலையில் சர்வதேச அழுத்தத்தின் ஊடாகவே நாமும் அரசியல் தீர்வை பெற வேண்டிய நிலை உள்ளது.

எனவே தமிழர்கள் தங்களை தாங்களே ஆளுகின்ற நிலைமை ஏற்பட வேண்டும் அதனை நாம் வென்றெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.