நாடாளுமன்றத்தில் முன்வரிசை ஆசனத்தை பெற மகிந்தவிடம் மன்றாடிய வீரவங்ச

Report Print Steephen Steephen in அரசியல்
220Shares

நாட்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் நெருக்கடிக்கு பின்னர், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மகிந்த மற்றும் மைத்திரி தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் அமர நேரிட்டது.

இதன் போது விமல் வீரவங்சவுக்கு நாடாளுமன்றத்தில் பின்வரிசை ஆசனமே ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிராக அடிக்கடி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சந்தித்த வீரவங்ச, தான் கட்சி ஒன்றின் தலைவர் என்பதால், தனக்கு முன்வரிசை ஆசனம் வழங்கப்பட வேண்டும் எனவும் இல்லாவிட்டால், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தொடர்ந்தும் இருப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்க நேரிடும் எனக் கூறியுள்ளார்.

இதனையடுத்து இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண மகிந்த ராஜபக்ச, சபாநாயகரை சந்தித்துள்ளார். இதன் பிரதிபலனாக விமல் வீரவங்சவுக்கு மீண்டும் முன்வரிசை ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நாடாளுமன்றம் கூடிய தினங்களில் விமல் வீரவங்ச பின்வரிசை ஆசனத்தில் அமருவதில் விருப்பம் இல்லாதவராக காணப்பட்டதுடன் முன்வரிசை ஆசனத்தை பெற்றுக்கொள்ள மகிந்த ராஜபக்ச மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்களுடன் கடும் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.