சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியானது சவரக் கத்தியில் தயிர் சாப்பிடுவது போன்றது

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை இந்த சந்தர்ப்பத்தில் பொறுப்பேற்று செயற்படுவதானது சவரக்கத்தியில் தயிரை சாப்பிடுவது போன்ற சவால் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக தயாசிறி ஜயசேகர கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சிறிபால டி சில்வா இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

தற்போதைய காலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சிறந்த காலம் அல்ல. பொதுஜன பெரமுனவின் வருகையுடன் கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது.

கட்சிக்குள்ளும் பிரச்சினைகள் இருக்கின்றன. இவற்றை எதிரிகள் தமக்கு சாதமாக பயன்படுத்த முடியாதபடி அர்ப்பணிப்புடன் செயற்படும் மிகப் பெரிய பொறுப்பும் கடமையும் கட்சியின் பொதுச் செயலாளருக்கு உள்ளது எனவும் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

புதிய பொதுச் செயலாளரால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தேவையான வலு கிடைக்கும் என நம்புகிறோம். அது இலகுவான பணியல்ல.

இந்த பதவியில் கடமையாற்ற கட்டுப்பாடு அவசியம். கட்டுப்பாடு இல்லாத காரணத்தினால், கட்சியும் ஜனாதிபதியும் கடந்த காலங்களில் அசௌகரியத்தை எதிர்நோக்கினர். தூரநோக்குடன் பணியாற்றுவது அவசியம். அத்துடன் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை ஒதுக்கி வைத்து விட்டு பணியாற்றுவது அவசியம்.

ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்பதே கட்சியின் தற்போதைய நிலைப்பாடு. எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தவறு என்று மக்கள் எந்த சந்தர்ப்பத்திலும் கூற மாட்டார்கள்.

அரசியல்வாதியையும் கட்சியையும் மக்களே கையாள்கின்றனர். மக்கள் சரியானது என நினைப்பதை நாம் செய்ய வேண்டும்.

மக்களின் நிலைப்பாடுகளில் தவறு இருந்தாலும் சரியான வழிக்கு கொண்டு வர வேண்டும் என்பது மக்களின் நிலைப்பாட்டை அரசியல்வாதிகள் ஏற்றுக்கொள்ள நேரிடும் எனவும் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.