மைத்திரியின் ஒக்டோபர் புரட்சியால் எல்லாமே கெட்டுப் போனது! ரணில்வெளிப்படை பேச்சு

Report Print Steephen Steephen in அரசியல்

கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி நாட்டில் நடந்த அரசியல் குழப்பம் காரணமாக அனைத்து நடவடிக்கைகளும் ஸ்தம்பித்து போனதாகவும் 51 நாட்களில் இழந்த பொருளாதார அபிவிருத்தியை மீண்டும் கட்டியெழுப்ப சில காலம் செல்லும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரை ஒன்றை ஆற்றிய போதே ரணில் விக்ரமசிங்க இதனை கூறியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட ஜனநாயக மற்றும் மக்களின் அரசுரிமைக்கு எதிரான சவாலை எதிர்கொண்டு மீண்டும் ஜனநாயகத்தை உயர்த்தி வைத்தது போல், பொருளாதாரத்தை மேம்படுத்துவோம்.

அரசியல், சமூக மற்றும் பொருளாதார ரீதியான பல சவால்கள் எம்முன் உள்ளன. 2015 ஆம் ஆண்டு நாங்கள் அரசாங்கத்தை பொறுபேற்ற போது, முழு நாடும் மிகவும் ஆபத்தான கடன் பொறியில் சிக்கியிருந்தது.

அந்த கடன் பொறியில் இருந்து புத்திசாலித்தனமாக விடுப்பட நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். கடன் பொறியில் சிக்கி, எமது துறைமுகம், விமான நிலையங்கள் போன்றவை வேறு நிறுவனங்கள், நாடுகளுக்கு சொந்தமான ஆபத்தில் இருந்து நாட்டை விடுவிக்க முடிந்தது. பல சிரமங்களுக்கு மத்தியில் நாங்கள் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைமைக்கு கொண்டு வந்தோம்.

எனினும் இந்த ஆண்டில் பொருளாதார துறையில் பெரிய சவால் காணப்படுகிறது. இந்த ஆண்டிலேயே அதிகமான கடனை திருப்பி செலுத்த வேண்டியுள்ளது.

2019 ஆம் ஆண்டில் 5 ஆயிரத்து 900 டொலர்களை வெளிநாட்டு கடன்கள் மற்றும் வட்டிக்காக செலுத்த வேண்டும். அதேபோல் இலங்கை வரலாற்றில் செலுத்த வேண்டிய மிகப் பெரிய கடன் தொகை எதிர்வரும் 14 ஆம் திகதி செலுத்தப்பட வேண்டும். அது 2 ஆயிரத்து 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பெறப்பட்ட கடனை நாட்டின் சாதாரண மக்களுக்கு சுமையின்றி செலுத்த நாங்கள் திட்டங்களை வகுத்திருந்தோம்.

தேசிய பொருளாதாரத்தை முன்னேற்றவும் ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்கவும் நாங்கள் திட்டங்களை முன்னெடுத்திருந்தோம்.

கடந்த ஆண்டில் உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட சில மாற்றங்களால், ரூபாயின் பெறுமதி குறைந்து போனது. ரூபாயை ஸ்திரப்படுத்த வழிமுறைகள் கடும் கவனத்தை செலுத்தியிருந்தோம்.

எனினும் ஒக்டோபர் 26 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் காரணமாக அனைத்து ஓரிடத்தில் நின்று போனது. 51 நாட்களாக நிலவிய அரசியல் ஸ்திரமற்ற நிலையால், ஸ்திர நிலைமை அடைந்து வந்த பொருளாதாரத்திற்கு பெரிய அடி விழுந்தது.

பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்து போனது. அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து போனது. எந்த நாட்டிடமோ, சர்வதேச நிதி நிறுவனங்களிடமோ, கடனையோ, உதவியையோ இலங்கையால் பெற முடியாமல் போனது எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.