கிழக்கு மாகாண ஆளுநருடன் சம்பந்தன் கலந்துரையாடல்

Report Print Dias Dias in அரசியல்

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது இரா.சம்பந்தன் ஆளுநருடன் கிழக்கு மாகாணத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

சட்டத்திற்கும் நீதிக்கும் முரணான சம்பவங்கள் கிழக்கு மாகாணத்தில் இடம்பெறுவதனை ஆளுநர் அனுமதிக்க கூடாது என்றும் முக்கிய விடயங்கள் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளின் ஆலோசனையுடனான முடிவுகள் எட்டப்படுவதானது தேவையற்ற முரண்பாடுகளை தவிர்க்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அரச நிர்வாக நியமனங்கள் வழங்கும் போது அனைத்து மக்களும் சமமாக நடாத்தப்படுதல் கடந்தகாலங்களில் கிழக்கு மாகாணத்தில் வாழும் பல்லின மக்களிடையே காணப்பட்ட இன விரிசல்களை இல்லாமல் செய்வதற்கு உதவும் எனவும் தெரிவித்துள்ளார்.

அனைத்து இன மக்களின் அபிலாசைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் புதிய ஆளுநரும் அவரது நிர்வாகமும் செயற்படவேண்டும் என இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Latest Offers