ஆயிரம் ரூபாவை பெற்று தருவதாக ஆசை காட்டிய கருப்புசட்டைகாரர்கள் 620 ரூபாய் சம்பளத்திற்கு கையொப்பம்!

Report Print Thirumal Thirumal in அரசியல்

ஆயிரம் ரூபாவை பெற்று தருவதாக ஆசை காட்டிய கருப்புசட்டைகாரர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் 620 ரூபாய் அடிப்படை சம்பளத்திற்கு கையொப்பம் இடவுள்ளதாக அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

போகாவத்தை தோட்டப்பகுதிக்கு புதிய வீடுகளை அமைச்சர், மக்கள் பாவனைக்கு வைபவ ரீதியாக கையளித்தார். இதில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

அரசியல் ரீதியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உடன் எந்த சந்தர்ப்பத்திலும் ஒன்று சேரப்போவதில்லை. தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக தொழிற்சங்க ரீதியில் எந்த பேய் உடனும் கைக்கோர்க்க தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

தொழிலாளர்களின் சம்பள உயர்வு பிரச்சினைக்காக இ.தொ.காவில் முன்னின்று உழைத்து இறையடி சேர்ந்த அமரர். எஸ்.அருள்சாமி அவரின் குடும்பத்தாருக்கு இத்தருணத்தில் தனது துக்கத்தை தெரிவிப்பதுடன் எதிர்வரும் காலத்தில் அன்னாரின் குடும்பத்தினருக்கு உதவுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அரசியல் ரீதியாக இ.தொ.காவுடன் ஒருகாலமும் ஒன்றிணையமாட்டேன். தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் தொழிற்சங்க ரீதியாக ஒன்றுபட்டு போராட எந்த பேய் உடனும் கைகாகோர்க்கத் தயாராகவுள்ளேன்.

எனவே கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியே விடுங்கள் போராடி ஆயிரம் ரூபாவை பெறுவோம். நான் தயார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரத்தில் சம்பளம் தொடர்பில் பெருந்தோட்ட அமைச்சர் நவீன் திசாநாயக்காவின் கூற்றுக்கு கண்டனத்தையும் வெளியிட்டுள்ளார்.