சர்வதேச ஹெரோயின் கடத்தலின் மத்திய நிலையமாக உருவெடுத்துள்ள இலங்கை!

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கை, சர்வதேச ஹெரோயின் கடத்தலின் மத்திய நிலையமாக மாறியுள்ளதாகவும் இந்த நிலைமைக்கு அரசியல்வாதிகள் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஹிக்கடுவையில் இன்று நடைபெற்ற சமய நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே மகிந்த ராஜபக்ச இதனை கூறியுள்ளார்.

இலங்கை, சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மத்திய நிலையமாக மாறியமைக்கு அரசியல்வாதிகளே பொறுப்புக் கூறவேண்டும். வரலாற்றில் என்றும் இல்லாத அளவுக்கு இலங்கை தற்போது போதைப் பொருள் காணப்படுகிறது.

அனைத்து வகையான போதைப் பொருட்களும் இருக்கின்றன. ஹெரோயின், கஞ்சா போன்றவற்றை பிடித்தால் அரசியல்வாதிகள் அவற்றை விடுவிக்கின்றனர்.

வடக்கில் கேரளா கஞ்சா பிடிப்பட்டதும் அவற்றை விடுவிக்க அங்குள்ள அரசியல்வாதி நடவடிக்கை எடுத்தமை அண்மைக் கால சம்பவமாக இருக்கின்றது. நாட்டில் போதைப் பொருள் பரவியமைக்கு அரசியல்வாதிகளே பொறுப்பு.

போதைப் பொருட்களை ஒழிப்பதற்கு பதிலாக பொலிஸார், ஹெரோயின் மற்றும் கஞ்சா கடத்தல்கார்களை கைது செய்யும் போது அரசியல்வாதிகள் அவர்களை விடுவிக்கின்றனர் என்றும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.