கஞ்சா கடத்தல் விவகாரத்தில் காவல்துறையினருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தெரிவிப்பதில் உண்மையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல், ஆளொருவரின் இறப்புக்கான சேதவீடுகளை அறவிடுதல் ஆகிய சட்டமூலங்கள் மீதான விவாதங்கள் இடம்பெற்றன.
இதன்போது, எதிர்க்கட்சி உறுப்பினர் விமல்வீரவங்ச கஞ்சா கடத்திய நபர்களை விடுவிக்குமாறு இந்த சபையிலுள்ள உறுப்பினர் ஒருவர் பொலிஸ் உயரதிகாரிக்கு அழுத்தங்களை கொடுத்திருக்கிறார். அவர் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தான் என்று குறிப்பிட்டார்.
இதற்குப் பதில் அளித்துப் பேசிய சுமந்திரன், வடமராட்சி செம்பியன்பற்று பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கைதான இளைஞர்களை விடுவிக்க பொலிசாருக்கு எந்த அழுத்தங்களையும் கொடுக்கவில்லை.
அத்தோடு அந்த சந்தேக நபர்களுக்கும் கஞ்சாவுக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்றார்.