ஒதுக்கி வைக்கப்பட்டார் சந்திரிக்கா? தயாசிறிக்கு பாராட்டு

Report Print Murali Murali in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட தயாசிறி ஜயசேகர கட்சி தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் கட்சியின் உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் றோஹன லக்ஷ்மன் பியதாச, பேச்சாளர் மஹிந்த சமரசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் பொதுச் செயலாளர் றோஹன லக்ஷ்மன் பியதாச தயாசிறிக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, சுதந்திரகட்சிக்கான தனது சேவை தொடரும் எனவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட ஆலோசகரும், முன்னாள் ஜனாதிபதியுமாக சந்திரிக்கா குமாரதுங்க இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.

கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கூட்டங்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளுக்கு சந்திரிக்கா அழைக்கப்படவில்லை. இந்த விடயம் தொடர்பில் சந்திரிக்கா அதிருப்பதியும் வெளியிட்டிருந்தார்.

இவ்வாறான நிலையில் இன்றைய நிகழ்விலும் அவர் கலந்துகொள்ளவில்லை. சந்திரிக்காவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் புறக்கணித்து வருவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.