கட்சிக்காக 24 மணி நேரமும் உழைப்பேன்! தயாசிறி ஜயசேகர

Report Print Murali Murali in அரசியல்

24 மணி நேரமும் கட்சிக்காக உழைப்பதாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய பொதுச்செயலாளரான தயாசிறி ஜயசேகர இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் இந்நிகழ்வில் பங்கேற்றதுடன், தயாசிறி ஜயசேகரவின் நியமனக் கடிதத்தை இதன்போது ஜனாதிபதி வழங்கி வைத்தார்.

கட்சியின் சிரேஸ்ட தலைவர்கள் உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட செயற்பாட்டாளர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, “24 மணி நேரமும் கட்சிக்காக உழைப்பதாக தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் தமது கட்சி உறுப்பினர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கட்சியை பலப்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கிராமங்கள் தோறும் சென்று கட்சி ஆதரவாளர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியிலிருந்து பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொண்டவர்கள் கட்சியை மீள் கட்டியெழுப்புவதற்காக மீண்டும் சுதந்திர கட்சியுடன் இணைந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.