ஜனாதிபதிக்கும் அவரது குடும்பத்திற்கும் காத்திருக்கும் ஆபத்து! மகிந்தவால் மட்டுமே காப்பாற்ற முடியும்

Report Print Murali Murali in அரசியல்

ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டால், அது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுதந்திர கட்சி தனித்து போட்டியிடுவது என்பது கட்சியின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும் ஒரு செயற்பாடாகவே அமையும்.

இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண கட்சியுடன், சுந்திர கட்சி கூட்டணி அமைத்து செயற்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு ஒருபோதும் எத்தேர்தல்களிலும் வெற்றிப்பெற முடியாது.

துரதிஸ்டவசமாக ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டால், அது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் அவரது குடும்த்தினருக்கும் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.

இவர்களுக்கு பொதுஜன பெரமுண முன்னணியின் தலைமைத்துவத்தினால் மாத்திரமே பாதுகாப்பு வழங்க முடியும். மகிந்த ராஜபக்ச தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை அரசியலில் செல்வாக்கு செலுத்தமாட்டார்.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினையும், அதன் தலைவரையும் பாதுகாக்க வேண்டிய கடமையும் எமக்கு காணப்படுகின்றது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.