மகிந்த - மைத்திரி தலைமையில் மெகா கூட்டணி!

Report Print Murali Murali in அரசியல்

எதிர்வரும் தேர்தலில் பாரிய கூட்டணி ஒன்றை அமைத்து போட்டியிட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கூட்டணியொன்றின் மூலம் தேர்தலில் போட்டியிடவுள்ளோம்.

மகிந்த ராஜபக்சவின் தலைமையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜீ.எல். பீரிஸ் தலைமை பொதுஜன பெரமுண, விமல் வீரவங்ச தலைமை தேசிய சுதந்திர முன்னணி உள்ளிட்ட கட்சிகளும் இணைந்து ஒரே முகாமிலேயே உள்ளோம்.

நாம் எந்த சின்னத்தில் போட்டியிட்டாலும் எந்த கட்சியில் போட்டியிட்டாலும் எங்களுக்கு வாக்குகள் கிடைக்கும். கட்சிக்குள்ளே மோதல் உள்ளது என்றால் தேர்தலுக்கு சென்று பாருங்கள்.

அரசாங்கம் எம்மை வெற்றி பெறச் செய்யத் தேவையில்லை. அவர்களுக்கு இது நல்ல நேரம் என்றால் அவர்கள் தற்போது தேர்தலை நடத்தலாம். தேர்தலை நடத்துமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.