இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் சிலர் இன்று சத்தியப்பிரமாணம்?

Report Print Murali Murali in அரசியல்

இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் சிலர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காலை ஒன்பது மணிக்கு ஜனாதிபதி இல்லத்தில் இந்த சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இது குறித்த உறுதியான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதி ஏற்பட்டிருந்த அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், மீண்டும் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து, ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவை நியமிக்கப்பட்டது. தொடர்ந்தும், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இதனிடையே, ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் அமைச்சு பதவி கோரிய நிலையில், அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

எனினும், இதற்கு பல்வேறு தரப்பினர்களும் எதிர்ப்பு வெளியிட்ட வருகின்றனர்.

இந்த பின்னணியிலேயே, இன்றைய தினம் இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் சிலர் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Latest Offers