சற்று முன்னர் புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்! அமைச்சரானார் ராதாகிருஷ்ணன்

Report Print Gokulan Gokulan in அரசியல்

விசேட பிராந்தியங்களுக்கான அபிவிருத்தி அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் வி. ராதாகிருஷ்ணன் சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலை பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

புதிய அமைச்சரவை சில வாரங்களுக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், பிரதியமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் பகுதியளவில் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக வி. ராதாகிருஷ்ணன் பதவியேற்றுள்ளார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது, கல்வி ராஜாங்க அமைச்சராக வி. ராதாகிருஷ்ணன் பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தொழில் மற்றும் தொழிற்சங்க விவகார அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக ரவீந்திர சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.

துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதி அமைச்சராக அப்துல்லா மஹரூப் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் தயா கமகேவுக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சுக்களில் திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன. அவரிடம் இருந்த தொழில் மற்றும் தொழிற்சங்க தொடர்புகள் துறை நீக்கப்பட்டுள்ளதுடன் சமூக வலுவூட்டல் என்ற புதிய அமைச்சு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Latest Offers