இலங்கையின் மாற்றம்! பொலிஸாரையும், படையினரையும் களமிறங்குமாறு கோரும் எதிர்க்கட்சித் தலைவர்

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கை இன்று சர்வதேச போதைவஸ்து மையமாகவும், போதைப்பொருள் கடத்தல்காரர்களின் தங்குமிடமாகவும் மாறியுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

காலியில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கூறுகையில், இந்த நிலையில் போதைவஸ்து தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று பார்த்துக் கொண்டிருக்காமல், பெற்றோர் தமது பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

அத்துடன் போதைவஸ்து கடத்தல்காரர்களுக்கு எதிராக பொலிஸாரும், படையினரும் அரசியலுக்கு அப்பாற்பட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Latest Offers