நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Report Print Yathu in அரசியல்

கிளிநொச்சி - இயக்கச்சி கோவில் வாயால் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இயக்கச்சி வட்டார பிரதேசசபை உறுப்பினர் தவராசா ரமேஸின் வேண்டுகோளுக்கிணங்க நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் குறித்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

குறித்த உபகரணங்களை பச்சிலைப்பள்ளி பிரதேசசபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் மற்றும் கட்சியின் விளையாட்டு இணைப்பாளர் ரஜிதன் ஆகியோர் வழங்கி வைத்துள்ளனர்.