ஜனாதிபதி முன்னிலையில் அப்துல்லா மஹ்ரூப் பிரதி அமைச்சராக சத்தியப்பிரமாணம்

Report Print Abdulsalam Yaseem in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதி அமைச்சராக அப்துல்லா மஹ்ரூப் இன்று சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

இவர் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவராக செயற்பட்டு வந்ததுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

இந்த நிலையில் இன்று ஜனாதிபதியினால் அப்துல்லா மஹ்ரூப் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் திருகோணமலை மாவட்ட மக்கள் தமது சந்தோசத்தை வெளிப்படுத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.