மட்டக்களப்பில் முற்றாக முடங்கியது தமிழர் பகுதிகள்

Report Print Kumar in அரசியல்

கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்திற்கு எதிராக மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை முதல் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

ஜனாதிபதியே! பொருத்தமற்ற ஹிஸ்புல்லாவை நீக்கி கிழக்கு மக்களை பாதுகாத்திடு என்னும் தலைப்பில் குறித்த ஹர்த்தாலை அனுஸ்டிக்க மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களில் முற்றாக இயல்பு வாழ்க்கை செயலிழந்துள்ளதுடன், முஸ்லிம்கள் அதிகளவில் வாழும் பிரதேசங்களில் வழமை போல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.

குறித்த பகுதியில் மாணவர்கள் பாடசாலைகளுக்கு வருகை தராமையினால் கல்வி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், அரச நிறுவனங்களும் வெறிச்சோடி காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

எனினும் தனியார் மற்றும் அரச போக்குவரத்து சேவைகள் வழமை போன்று நடைபெற்றுவரும் நிலையிலும் மக்கள் வரவு குறைவான அளவிலேயே காணப்பட்டுள்ளது.