பொன்னான தருணத்தை இழந்து விடக்கூடாது! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிவிப்பு

Report Print Rakesh in அரசியல்

அரசமைப்பு உருவாக்க செயற்பாடுகளில் இருந்து இறுதிவரை பின்வாங்க போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்று கூடிய அரசமைப்பு சபையில் புதிய அரசமைப்பு குறித்த யோசனையை முன்வைத்து உரையாற்றிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அரசமைப்பு உருவாக்கத்தில் உள்ள பிரதான தமிழ்க் கட்சி என்ற அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளங்குகின்றது.

இந்நாட்டின் அரசமைப்பு அனைவரது ஆதரவுடன் ஏற்படுத்தப்பட்டது என்ற அடிப்படையில் எமது பங்களிப்பை வழங்கியுள்ளோம்.

இரண்டு பிரதான தரப்புகளும் இதனை உணர்ந்து கொள்ள வேண்டும். புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான இந்த பொன்னான தருணத்தை நாம் இழந்து விடக்கூடாது.

இதேவேளை, புதிய அரசமைப்புக்கான நிபுணர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களின் உத்தேசவரைவு திட்ட அறிக்கை மூன்று மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.