அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய விடயம்! எதிர்வரும் நாட்களில் நாய் வரி

Report Print Kamel Kamel in அரசியல்

நாட்டை துண்டாடும் அரசியல் அமைப்பின் ஆரம்பகட்ட பணிகள் இன்றைய தினம் ஆரம்பமாக உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

காலி - கரன்தெனிய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்றதன் பின்னர் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

இதுவரை காலமும் நாட்டில் கறுப்பு ஊடகம் என்று ஒன்று இருக்கவில்லை, அரசாங்கத்தின் விருப்பு வெறுப்பிற்கு அமைய கறுப்பு ஊடகம் என சில ஊடகங்கள் அடையாளப்படுத்தப்படுகின்றன.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி இல்லாத காலத்தில் நாடாளுமன்றிற்கு எப்போது வேண்டுமானலும் செல்ல முடியும், எனினும் தற்பொழுது அவ்வாறில்லை, கட்டாயமாக நான் இருக்க வேண்டும்.

இலங்கை போதைப்பொருள் வர்த்தக மையமாக மாறியுள்ளது, வடக்கில் கேரள கஞ்சா போதைப்பொருள் பாரியளவில் கடத்தப்படுகின்றது, அவ்வாறு கடத்துவோரை வடக்கு அரசியல்வாதிகள் பாதுகாக்கின்றனர்.

போதைப்பொருள் வர்த்தகர்கள் விடுதலை செய்யப்படுவதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம், இந்த விவகாரங்களில் அரசியல்வாதிகள் தலையீடு செய்ய வேண்டும்.

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் பொலிஸாருடன், விஹாரைகளும் இணைந்து செயற்பட வேண்டும்.

தற்பொழுது கார்பன் வரியை அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது, எதிர்வரும் நாட்களில் நாய் வரியையும் அரசாங்கம் கொண்டு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.

Latest Offers