சுற்றாடல் அதிகாரசபையின் தலைவராக முஸம்மில் நியமனம்

Report Print Ajith Ajith in அரசியல்

கொழும்பு மாநகரசபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

மலேசியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக முஸம்மில் ஏற்கனவே பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.