மக்கள் விடுதலை முன்னணிக்கு 10 மில்லியன் ரூபா செலுத்த வேண்டும்!

Report Print Gokulan Gokulan in அரசியல்

மக்கள் விடுதலை முன்னணிக்கு 10 மில்லியன் ரூபாவை செலுத்துமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு கொழும்பு வணிக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வணிக நீதிமன்றம் இன்றைய தினம் உத்தரவிட்டுள்ளது.

விமல் வீரவன்சவினால் எழுதப்பட்டு, அண்மையில் வெளியிடப்பட்டிருந்த “நெத்த வெனுவட்ட அத்த” எனும் நூலினூடாக, ஜே.வி.பியின் அறிவுசார் சொத்து சூறையாடப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் பிரசாரச் செயலாளர் டில்வின் சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கொன்றிலேயே, மேற்கண்ட தீர்ப்பானது இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விமல் வீரவன்சவினால் எழுதப்பட்ட குறித்த நூலினையும் விநியோகிப்பதற்கான தடையுத்தரவினையும் வணிக நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.