போதைப்பொருள் ஒழிப்பை மாணவர்களின் மூலம் கற்றுக்கொள்வோம்! அகிலவிராஜ்

Report Print Gokulan Gokulan in அரசியல்

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசதத்தின் வழிகாட்டலின் கீழ் ஜனவரி மாதம் 21ஆம் திகதி முதல் 25ஆம் வரை போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது.

போதைப்பொருள் ஒழிப்பை மாணவர்களின் மூலம் கற்றுக்கொள்வோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் பாடசாலை மாணவர்களையும் பெற்றோர்களையும் இலக்காக கொண்டு பல்வேறு வேலைத்திட்டங்களை கல்வி அமைச்சு முன்னெடுத்துள்ளது.

ஜனாதிபதி செயலகம் உட்பட அரச நிறுவனங்கள் இணைந்து ஒன்றிணைந்த வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கல்வி துறை சார்ந்த அதிகாரிகள், அதிபர்களை தெளிவூட்டுவதற்கான அனைத்து ஆலோசனைகளையும் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளன என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

போதைப்பொருள் ஒழிப்பை வாழ்க்கையில் பழக்கமாக முன்னெடுக்க வேண்டும். போதைப்பொருளுக்கு மாணவர்கள் அடிமையாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இது சமூக அழிவுக்கு உந்து சக்தியாக அமையும். ஆகவே இந்த விவகாரம் மிகவும் பாரதூரமானது எனவே சுற்று வட்ட சமூக சூழல் மாணவர்களை போதைப்பொருளுக்கு அடிமையாக்கின்றது.

ஆகவே இந்த விவகாரம் தொடர்பாக மாணவர்களை தெளிவூட்டுவது மட்டுமன்றி அதற்கான செயற்திறன்மிக்க வேலைத்திட்டங்கள் அவசியமானது எனவும் தெரிவித்துள்ளார்.