அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் விரைவில் தீர்மானம்

Report Print Gokulan Gokulan in அரசியல்

நீண்ட காலமாக, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு, விரைவில் நல்ல செய்தி கிடைக்குமென, நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பியமைக்கு பதில் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், அரசாங்கம், நல்லதொரு தீர்மானத்தை எடுக்கவுள்ளதாகவும் இது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்ததோடு, இந்தத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் விரைவில் அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மனைவி, பிள்ளைகளைப் பிரிந்து, 11 மாதங்கள் சிறையிலிருந்த அர்ஜுன் அலோசியஸுக்குப் பிணை வழங்க முடியுமென்றால், 11 வருடங்களுக்கு மேலாக சிறைச்சாலையில் வாடும் அரசியல் கைதிகளுக்கு ஏன் பிணை வழங்க முடியாது​?

என, நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடதக்கது.

Latest Offers