மகிந்தவின் பெயரை முன்மொழிந்தவர் எதிர்க்கட்சியின் வேட்பாளராக மாறினார்! எச்சரிக்கும் காஞ்சன

Report Print Steephen Steephen in அரசியல்

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச என பெயரை முன்மொழிந்தவர் பின்னர், எதிர்க்கட்சியின் வேட்பாளராக மாறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அத்துடன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தெரிவு செய்யும் போது, நாட்டு மக்களில் பெரும்பான்மையானோர் கொண்டுள்ள நிலைப்பாட்டை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் அடுத்த ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன மீண்டும் தெரிவாக வேண்டும் என மகிந்த சமரசிங்க கூறியிருந்தார். பல யோசனைகள் இருக்கலாம். யதார்த்தத்துடன் அந்த யோசனைகள் குறித்து சிந்திக்க வேண்டும்.

மகிந்த ராஜபக்ச என்பவர் இந்த நாட்டு மக்கள் கோரும் தலைவர். வேட்பாளரை தெரிவு செய்யும் போது நாட்டில் பெரும்பான்மை மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் நிலைப்பாடு குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும் என நாங்கள் நம்புகிறோம்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மகிந்த ராஜபக்சவின் பெயரை முன்மொழிந்தவர்கள்.

எதிர்க்கட்சியின் வேட்பாளர்களாக மாறினர். இதனால், தற்போது யோசனைகளை முன்வைப்போர் அடுத்ததாக எதிரணியின் பலமிக்கவர்களாக மாறலாம் என்ற சந்தேகம் எமக்கு இருக்கின்றது.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே பிரதான கட்சியாக செயற்பட்டது. அந்த கட்சியில் இளைஞர்களின் நிலைப்பாடுகள் பிரதிபலிக்கப்பட வேண்டும்.

அப்படியில்லை என்றால், வாக்கு பெட்டிகளை எண்ணும் போது ஒன்றும் இரண்டுக்கும் இடையில் சமமான வாக்குகள் இருக்கும் என கட்சியின் தலைவர்களை நாங்கள் எச்சரிக்கின்றோம் எனவும் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.