புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் வடக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகள் இல்லை

Report Print Steephen Steephen in அரசியல்

புதிய அரசியலமைப்புச் சட்டம் அரசியல் கட்சிகளின் தேவைகளுக்கு அமைய கொண்டு வரப்பட உள்ளதே தவிர வடக்கு மக்களின் உண்மையான பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நோக்கத்தில் அல்ல எனவும் தேசிய பிக்கு ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கும் நோக்கில் கொழும்பில் இன்று நடைபெற்ற பிண்ட பாத்திரம் ஏந்தும் நிகழ்விற்கு பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதனிடையே புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வருவது தொடர்பாக இந்த சந்தர்ப்பத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்துவது பலனளிக்கும் செயற்பாடு அல்ல என முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கூறியுள்ளார்.

காலி கராந்தெனிய மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.