மைத்திரி போட்டியிட்டால் ஆதரவு இல்லை! மைத்திரியின் நகர்வுக்கு முட்டுக்கட்டை

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டால், அவருக்கு ஆதரவளிக்க போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஒன்றியத்தின் இந்த தீர்மானத்தை ஏகமனதாக ஆதரிப்பதாக மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பிரமித பண்டார தென்னகோன் கூறியுள்ளார்.

அடுத்த மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் தென்னகோன் தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.