மஹிந்த அணியினர் தப்பியது எப்படி?

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட அவரது அணியினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கைவிட்டு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துக் கொண்ட விதத்தை நாடு மட்டுமல்ல முழு உலகமும் பார்த்ததாக சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கத்துவத்தை பெறவில்லை என்று அவர்களால் கூற முடியாது எனவும் ஊடகங்களுக்கு முன்னால், தாம் கட்சி மாறியதை மிகவும் பெருமையாக கூறியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்தாகி விடும் என்ற அனுதாபத்தில், சபாநாயகருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர், அவர்கள் முன்னணியின் உறுப்பினர்கள் என்று கடிதத்தை வழங்கினார். இதனால், அவர்களது பதவி தப்பித்தது.

அரசாங்கத்துடன் இணைந்துகொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமாயின், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.