பதவியேற்றுக் கொண்ட கிழக்கு ஆளுநரின் உத்தரவு

Report Print Nivetha in அரசியல்

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிழக்கு மாகாணத்திலுள்ள சகல மாகாணப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 14ஆம் திகதி விடுமுறை வழங்குவதற்காக கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.எ.எம். ஹிஸ்புல்லா அனுமதி வழங்கியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் மாகாண கல்வித் திணைக்களத்தின் இணையத்தளத்தில் உத்தியோகபூர்வமாக இதனை அறிவித்துள்ளார்.

தைப்பொங்கலுக்கு முதல் தினமான திங்கட்கிழமை(14) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் அதற்கான பதில் பாடசாலை எதிர்வரும் 19ஆம் திகதி சனிக்கிழமை நடாத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இவ்விடுமுறை மாகாணப் பாடசாலைகளுக்கு மாத்திரமே அன்றி தேசியப் பாடசாலைகளுக்கு அல்ல என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழர்களின் பண்டிகையான தைப்பொங்கலையொட்டி இவ்வாறானதொரு விடுமுறை வழங்கியமையினால் கிழக்கு தமிழ் மக்கள் மகிழ்ச்சியுடன் ஆளுநருக்கு நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

மேலதிக தகவல் - V.T.Sahadevarajah