மைத்திரி தலைமையில் இடம்பெற்ற அவசர கலந்துரையாடல்!

Report Print Murali Murali in அரசியல்

ஜனாதிபதிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இதில் வடமேல் மாகாணத்தில் செயற்படுகின்ற சுதந்திரக் கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஜனாதிபதிக்கும் ஆளுனர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு இடையிலும் விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திப்பில் கருத்து தெரிவித்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மக்கள் சேவையை முறையாகவும் செயல் திறனுடனும் புதிய ஆளுனர்கள் முன்னெடுத்து செல்வார்கள் என தான் எதிர்ப்பார்ப்பதாக கூறியுள்ளார்.

Latest Offers