ரணிலின் கூட்டத்தை முறித்துக் கொண்டு வெளியேற முற்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்! நடந்தது இது தான்

Report Print Dias Dias in அரசியல்

வட மாகாணத்தில் அண்மையில் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படும் பௌத்த மதத்தை திணிக்கும் செயற்பாட்டிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்குமிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது. நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் இந்த சந்திப்பு நடந்தது.

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் அரசாங்க அதிகாரிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவொன்றை அமைப்பதென முடிவெடுக்கப்பட்டிருந்தது. அந்த குழுவை அடுத்த வாரமளவில் உருவாக்குவதென முடிவெடுக்கப்பட்டது.

கம்பெரலிய நிதி, அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டது. இதன் போது வெடுக்குநாறி மலையில் மேற்கொள்ளப்படும் ஆய்வு மற்றும் நாயாறுப் பகுதியில் மேற்கொள்ளப்படும் பௌத்த மதத்தை திணிப்பது போன்றன குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பினார்.

இதன்போது குறிக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இது தொடர்பாக பிறிதொரு தினத்தில் பேசலாம் என்று தடுத்தார். எனினும், அவரின் பேச்சுக்கு செவி சாய்க்காத சார்ளஸ் நிர்மலநாதன், தொடர்ந்தும் பேசினார்.

தமிழர் பகுதிகள் தொடர்ந்தும் திட்டமிடப்பட்டு அழிக்கப்படுகின்றன. குறிப்பாக பௌத்தத்திற்கு முன்னுரிமை கொடுத்து தமிழர்களின் அடையாளங்களும், பண்பாடுகளும் சிதைக்கப்படுகின்றன. இதற்கான நடவடிக்கைகளை பிரதமர் எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

எனினும், இது தொடர்பாக அலட்சிப் போக்கினை ரணில் வெளிப்படுத்தியதாகவும், இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் அக்கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளார். இதனையடுத்து சுமந்திரனும், பிரதமர் ரணிலும் நிர்மலநாதனை சமாதானப்படுத்தியாதகவும், இது தொடர்பான குழுவொன்று திங்கட்கிழமை அமைக்கப்படும் என்றும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பிரதமர் ரணிலைப்பார்த்து, உங்கள் தேவைகளுக்காக நீங்கள் வழிபடும் கடவுளர்களை மாற்றுவீர்களா என்றும் கேள்வியெழுப்பியதோது, இந்துக்களுக்கு இந்து ஆலயங்கள் முக்கியமானவை. அவற்றை அவ்வாறே இருக்க விடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கிடையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், ஏனையவர்களுக்கும் மதிப்பளித்து அவர் தொடர்ந்தும் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

எவ்வாறாயினும் இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்த போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைதி காத்துக் கொண்டிருந்தனர் என அங்கிருந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Latest Offers