யாரும் எங்களுடன் இணைந்துகொள்ளலாம்! மகிந்த அணியினர் அழைப்பு

Report Print Murali Murali in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண கட்சியின் வேட்பாளர் ஒருவரே போட்டியிடுவார் என அந்த கட்சி தெரிவித்துள்ளார்.

சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் காஞ்சனா ஜயரட்ன இதனை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண தலைமையிலான கூட்டணி எதிர்வரும் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், யாராக இருந்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.