ரணிலின் புகைப்படத்தை அலுவலகத்தில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்த புதிய ஆளுநர்!

Report Print Kamel Kamel in அரசியல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் புகைப்படமொன்றை அலுவலகத்தில் வைக்குமாறு மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரட்ன தனது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மத்திய மாகாண ஆளுநராக நேற்று மைத்திரி குணரட்ன தனது கடமைகளை பொறுப் பேற்றுக்கொண்டார்.

இதன் போது ஆளுநர் அலுவலகத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் புகைப்படம் எதுவும் இருக்கவில்லை, ஜனாதிபதியின் புகைப்படம் மட்டுமே சுவரில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இதனை அவதானித்த ஆளுநர் மைத்திரி, பிரதமரின் புகைப்படம் ஒன்றையும் சுவரில் காட்சிப்படுத்துமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

அரசியல் முரண்பாட்டு நிலைமைகள் காணப்பட்டாலும் நாட்டின் பிரதமர் என்ற அடிப்படையல் அவருக்க உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers