ஊடக நிறுவனங்களுக்கு எதிரில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களுடன் ஐ.தே.காவுக்கு தொடர்பா?

Report Print Kamel Kamel in அரசியல்

ஊடக நிறுவனங்களுக்கு எதிரில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களுக்கும் தமக்கும் தொடர்பு கிடையாது என ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சிவில் செயற்பாட்டாளர்களினால் அண்மையில் ஊடக நிறுவனங்களுக்கு எதிரில் அமைதியான முறையில் கறுப்புப் பட்டி போராட்டம் ஒன்று நடத்தப்பட்டிருந்தது.

நாட்டின் ஜனநாயகத்தையும் மக்கள் ஆணையைiயும் பாதுகாக்கும் நோக்கில் கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி முதல் போராடிய சிவில் அமைப்புக்களினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி எல்லா சந்தர்ப்பங்களிலும் ஊடக சுதந்திரத்தை மதித்து செயற்பட்டு வரும் ஓர் கட்சியாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, அமைதியான முறையில் போராட்டம் நடத்திய குறித்த சிவில் அமைப்புக்களை அரச சார்பற்ற நிறுவனங்களின் கைக்கூலிகள் எனவும், சர்வதேச சதித் திட்டங்களின் பங்காளிகள் எனவும் சில ஊடகங்கள் அடையாளப்படுத்தி வருவதுடன், நாட்டை தீ மூட்டி வன்முறையை விதைக்கும் தரப்பினரை தேசப்பற்றாளர்களாக போற்றிப் புகழும் நிலைமையை அவதானிக்க முடிகின்றது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

Latest Offers